அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் மேடலின் ஆலிபிரைட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 85வது வயதில் காலமானார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் அரசாங்கத்தில் 4 ஆண்டுகளாக மேடலின் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார். கிளின்டனின் பதவிக் காலத்தில் அமெரிக்க வரலாற்றில் மிக உயர்ந்த பதவியில் இருந்த பெண் மேடலின் ஆவார். இருப்பினும், மேடலினால் ஜனாதிபதி போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இதற்குக் காரணம் அவர் செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்தவர். மேடலின் 1937 மே 15 அன்று செக்கோஸ்லோவாக்கியாவின் தலைநகரான […]