புனேயில் 32.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 12 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது முடிக்கப்பட்டுள்ள 12 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11.30 மணிக்கு புனே கார்வாரே மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார். மேலும், டிக்கெட் எடுத்துக்கொண்டு மெட்ரோ ரயிலில் பள்ளி குழந்தைகள் மற்றும் அதிகாரிகளுடன் பயணம் செய்தார்.