Whatsapp : சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப் எப்போதும் தனது பயனர்களை கவரும் வகையில் புதிய, புதிய அப்டேட்களை அவ்வப்போது கொண்டு வருகிறது. இந்த முறை வாட்ஸ்அப் ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வந்து பயனர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். இந்த அதிரடி அப்டேட்டின் மூலம், பயனர்கள் இனிமேல் வாட்ஸ் ஆப் மூலம் வேறு இதர அரட்டை ஆப்ஸ்க்கும் செய்திகளை அனுப்பலாம். Read More :- தயவு செய்து இனி அதை செய்யாதீங்க… தங்கள் பயனர்களை எச்சரிக்கும் […]
கடந்த செப்டம்பர் மாதம் நவீன உலகை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், மெட்டா மற்றும் ரே-பான் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து புதிய ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ்-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த கண்ணாடிகள் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் உட்பட மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஹேண்ட்ஸ்-ஃப்ரீ சாதனமான ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ் ஒரு சிறிய கேமரா மற்றும் மைக்ரோஃபோனுடன் வருகிறது. இதில் இருக்கும் ஹே மெட்டா (Hey Meta) என்ற குரல் அம்சத்தின் மூலம் […]
கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ‘சாட் லாக்’ மற்றும் சாட் லாக்கிற்கான ‘சீக்ரெட் கோட்’ போன்றவற்றை அறிமுகம் செய்தது. இதற்கிடையில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான ‘வியூ ஒன்ஸ்’ (View Once) என்ற அம்சத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்த அம்சத்தினால் நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். அதேபோல இந்த புகைப்படங்களை […]
வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் பாதுகாப்பை இரட்டிப்பாக்கும் நோக்கில், சேட்களுக்கு “சீக்ரெட் கோட்” (Secret Code) எனும் அம்சத்தை வெளிட்டுள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் 18ம் தேதி சாட்டை லாக் செய்து ரகசியமாக வைப்பதற்கான “சாட் லாக்” (Chat Lock) அம்சத்தையையும் அதற்கான ஷார்ட்கட்டையும் வெளியிட்டது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி உங்களுடைய தனிப்பட்ட முக்கியமான சாட்களை லாக் செய்ய முடியும். மீண்டும் அதனை திறக்க உங்கள் கைரேகை அல்லது போனின் பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும். இதன் அடிப்படையில் […]
வாட்ஸ்அப் நிறுவனம் நாளுக்கு நாள் அதன் செயலில் ஸ்டைல்ஸ் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் என பலவற்றை அறிமுகம் எய்து வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 18ம் தேதி சேட்டை லாக் செய்து ரகசியமாக வைப்பதற்கான அம்சத்தையையும் அதற்கான ஷார்ட்கட்டையும் வெளியிட்டது. நீங்கள் ஒருவரிடம் ஏதேனும் ரகசியமாக பேசுகிறீர்கள் அல்லது நீங்கள் யாரிடம் பேசினாலும் அதை ஒருவரும் பார்த்துவிடக் கூடாது என்கிற பட்சத்தில், இந்த அம்சத்தைப் பயன்படுத்தி அந்த சேட்டை லாக் செய்ய முடியும். அந்த சேட்டை […]
வாட்ஸஅப் நிறுவனம் ரசிகர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய பல புதிய அம்சங்களைப் புகுத்தி வருகிறது. சமீபத்தில் வாட்ஸ்அப் சேனல்கள் என்ற புதிய ஒளிபரப்பு அம்சம், ஒரே வாட்ஸ்அப்பில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சம், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எச்டி குவாலிட்டியில் அனுப்பும் அம்சம், ஸ்கிரீன் ஷேரிங் போன்றவற்றை அறிமுகம் செய்தது. இது ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் செயலிக்கு மட்டுமல்லாமல், வாட்ஸஅப் டெஸ்க்டாப்பிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு பயனர்களின் பாதுகாப்பிற்காக வாட்ஸ்அப் செயலில் ‘வியூ […]
மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப், அதன் செயலியில் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு பயனர்களை குதூகலப்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஒரே வாட்ஸ்அப்பில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சம், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எச்டி குவாலிட்டியில் அனுப்பும் அம்சம், ஸ்கிரீன் ஷேரிங் மற்றும் சேனல் போன்றவற்றை அறிமுகம் செய்தது. தற்போது இந்த அம்சங்களுடன் சேர்த்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கக்கூடிய மெட்டா ஏஐ அசிஸ்டென்ட் (AI-powered chats) எனப்படும் சாட் பாட்டை கடந்த 17ம் தேதி அறிமுகம் […]
பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராத தொகையாக அளிக்க ஒப்புகொடுள்ளது. கடந்த 2016 ஆம் அமெரிக்க தேர்தலின் போது அமெரிக்க பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்த பிரிட்டிஷ் அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா பயன்படுத்த அனுமதித்ததாக பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் 2018இல் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை 2018முதல் நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று, பேஸ்புக் தாய் நிறுவனமான […]
கூகுள் நிறுவனத்தில் செயல்பாடு திறன் குறைவாக உள்ள 10,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய காலம் ஐடி துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு திக் திக் காலம் போல செல்கிறது. ஏற்கனவே, உலக பெரிய நிறுவனங்களான டிவிட்டர், மெட்டா, அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை வேலையில் இருந்து ஆயிரக்கணக்கில் பணிநீக்கம் செய்து வருகின்றனர். அதே போல, கூகுள் நிறுவனமும் தங்கள் நிறுவனத்தில் செயல்பாடு திறன் குறைவாக இருக்கும் வேலையாட்களை […]
வருவாய் குறைந்ததால் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார் மெட்டா நிறுவனர் மார்க் ஜூகர்பர்க். பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூகர்பர்க், பேஸ்புக் நிறுவனத்தின் அதிரிபுதிரி வளர்ச்சியை அடுத்து வாட்சாப், இன்ஸ்டாகிராம் பக்கங்களை வாங்கி இவை அனைத்தையும் மெட்டா எனும் நிறுவனத்தின் கீழ் ஒன்றிணைத்தார். இவை அனைத்தையும் மெட்டா நிறுவனத்தின் கீழ் ஒன்றிணைத்து ஒரு வருட காலத்தில் 600 பில்லியன் அளவுக்கு சரிவை அந்நிறுவனம் சந்தித்துள்ளது. இதனால், செலவுகளை சமாளிக்க வேலைக்குறைப்பு நடவடிக்கையில் மார்க் ஜூகர்பர்க் ஈடுபட்டுள்ளார். […]
மெட்டா நிறுவனம், முகநூலில் பயனர்களின் அக்கௌன்ட் மற்றும் கடவுச்சொல் விவரம் திருடப்படுவதாக, 1 மில்லியன் பயனர்களுக்கு எச்சரித்துள்ளது. ஆப்பிள் ஸ்டோர்ஸ் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்ஸ் போன்றவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும் சில செயலிகள்(Apps) ஃபேஸ் புக் மூலம் உள்நுழைய(Login) அனுமதி கேட்கிறது, இதனால் இந்த ஆப்ஸ்கள்(Apps) ஃபேஸ் புக் பயனர்களின் தகவல்களை எளிதாக திருடுவதற்கு வசதியாக இருக்கிறது என்று மெட்டா நிறுவனம் சமீபத்தில் சுமார் 1 மில்லியன் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. மெட்டா நிறுவனம், இந்த ஆண்டு […]
உலக அளவில் பல கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப்பில் மெட்டா நிறுவனம் தங்களின் வாட்சப் பயனர்களுக்கு தேவையான அம்சங்களை வழங்குவதிலும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்,வாட்ஸ்அப் குரூப்பில் இதுவரை 256 நபர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ளும் வசதி இருந்த நிலையில்,இனி ஒரே வாட்ஸ்அப் குரூப்பில் 512 உறுப்பினர்களை வரை சேர்த்து கொள்ளும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.முன்னதாக இந்த வசதி Android மற்றும் iOS மொபைல் போன்களில் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தது. மேலும்,புதுப்பிக்கப்பட்ட […]
முகநூல் ,வாட்ஸப் ,இன்ஸ்ட்ராகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா வின் செயல்பாட்டு இயக்குநரான ஷெரில் சாண்ட்பெர்க், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஷெரில் சாண்ட்பெர்க் ராஜினாமா: மார்க் ஜுக்கர்பெர்க்கிற்குப் பிறகு மெட்டாவில் இரண்டாவது மிக முக்கியமான நபரான சாண்ட்பெர்க், வியாழன் அன்று அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பதிவில் மெட்டாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.இவர் மெட்டா நிறுவனத்தில் 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். சாண்ட்பெர்க் தனது பதவியைவிட்டு விலகினாலும்,அவரை நிர்வாக குழுவில் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொள்வர் என்று தெரிவித்துள்ளார்.மேலும்,ஜேவியர் ஆலிவன் […]