மெக்சிகோவில் இன்று அதிகாலை 7.6 ரிக்டர் அளவில் அளவில் நிலநடுக்கம் பதிவு ஆகி உள்ளது. மிக பெரிய அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிட இடர்பாடுகளில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் பலர் காயம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மெக்சிகோ சிட்டியில் இருந்து 400 கிமீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பதிவாகியுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெக்சிகோவில் கோலிமா என்ற […]