ஏமன் மெகுனு புயலால் 2 இந்தியர்கள் உயிரிழப்பு..!!மேலும் 12 பேர் மாயம்..!!
அரபிக்கடலில் உருவான மெகுனு புயல், தீவிரப்புயலாக மாறி மேற்கு நோக்கி நகர்ந்தது. இது ஏமனுக்கு சொந்தமான சொக்கோட்ரா தீவை கடந்த வியாழக்கிழமை தாக்கியது. கடும் சூறாவளிக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்ததில், ஏமன் நாட்டவர்கள் 5 பேரும், இந்தியர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் மாயமாகினர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, ஓமன் நாட்டில் வெள்ளிக்கிழமை புயல் கரையைக் கடந்தது. நாட்டின் இரண்டாவது பெரிய நகரான சலாலாவில், மணிக்கு 170 […]