தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கேரள அரசுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு கேரள அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதன்படி அக்கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்காக 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி தரவேண்டும் என்றும், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கத்தை அளவிடும் கருவிகளை அமைக்க கேரள வனத்துறை அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். மேலும் உச்ச நீதிமன்ற […]