முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்து விடக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு, கேரளா அரசு கடிதம். முல்லை பெரியாறு அணையில் இருந்து நீரை திறக்கக் கோரி முதல்வர் முக ஸ்டாலினுக்கு, கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். முல்லை பெரியாறு அணை 137 அடியை கடந்த நிலையில், படிப்படியாக நீரை இப்போதிலிருந்தே திறக்க கோரிக்கை வைத்துள்ளார். தண்ணீரை திறக்கும் 24 மணிநேரத்திற்கு முன்னர் அறிவிப்பு கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையை […]
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு முயற்சிகளும் எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நீர் வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையை நான் 05.11.2021 அன்று பார்வையிட்டு பொறியாளர்களுக்கு அணையில் நீர்த்தேக்குவது பற்றிய அறிவுரைகளை வழங்கினேன். பருவ மழை காலத்தில், குறிப்பாக வெள்ள காலங்களில், காலமுறைப்படி வரும் வெள்ள நீரை தேக்கி வைத்து முறைப்படுத்துவதற்கு ஏதுவாக, அணையின் நீர்மட்டத்தை முன்கூட்டியே நிர்ணயித்து. அதன்படி அணையின் […]
தமிழகம்:முல்லைப் பெரியாறு பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை கேரள அரசு திடீரென ரத்து செய்ததற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமதி வழங்கியதற்கு கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.ஆனால்,அதன்பிறகு மரம் வெட்டுவதற்கு தந்த அனுமதியை கேரள அரசு ரத்து செய்தது. இந்நிலையில்,தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணை […]
உச்சநீதிமன்றத்தீர்ப்பின் படி முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்குவதற்கு தி.மு.க அரசுக்கு தடையாக இருப்பது எது? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கிக்கொள்ளலாம் எனவும்,உறுதித் தன்மையை தெரிந்து கொண்டு 152 அடி வரை தண்ணீரை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் , ஆனால்,கேரள அரசு அளித்த தவறான தகவல்கள் உண்மைக்கு புறம்பாக எழுப்பி வரும் பிரச்சனைகளுக்கு அடிபணிந்த தமிழக அரசு, தண்ணீர் 138 அடியை எட்டும் முன்பே, […]