உத்தரகாண்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்கலைக்கழகத்திற்கு முப்படைத் தளபதி பிபின் ராவத் அவர்களின் பெயரை சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குன்னூரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.இதனையடுத்து,13 பேரின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து டெல்லியில் உள்ள பாலம் விமான தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ […]