திருவண்ணாமலை மாவட்டம் சொரகொளத்தூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற போது 2 பேர் உயிரிழந்துள்ளனர்.சரண்ராஜ் என்பவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றபோது ஏழுமலை என்பவரும்,சரண்ராஜைக் காப்பாற்ற வந்த ரேணுகோபால் என்பவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சரண்ராஜ் மீதான நிலத்தகராறு முன்விரோதம் காரணமாக அவரை மின்சாரம் பாய்ச்சி ஏழுமலை கொலை செய்ய முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறபபடுகிறது. இதனையடுத்து,சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு […]