பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தமிழக முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பண்டிகைகள் தொடர்ந்து வரும் நிலையில், இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பள்ளிகள் திறப்பு மற்றும் வழிபாடு […]