முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள தங்கும் விடுதிகளில் பட்டாசு வெடிக்க தடை. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள தங்கும் விடுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தங்கும் விடுதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாட வனத்துறை தடை விதித்துள்ளது. பட்டாசு சத்தத்தால் வனவிலங்குகள் அச்சமடையும் என்பதால் தடை விதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
நீலகிரியில் உள்ள முதுமலை சுற்றுலா மையம் இன்று முதல் திறப்பு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. […]