இந்தியாவிலேயே முதல் முறையாக முதியவர்களுக்கான மருத்துவ சேவை மையம் சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கப்படவுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக சென்னையில் சைதாப்பேட்டை பொது மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: “சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கிண்டியில் மூத்தோருக்கான மருத்துவமனை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட நிலையில்,கடந்த ஆட்சியாளர்கள் அதனை தொடங்கி வைக்க சுணக்கம் காட்டினார்கள்.இதனையடுத்து,கொரோனா பேரிடர் காலத்தில் அம்மருத்துவமனை தற்காலிக கொரோனா மையமாக செயல்பட்டது. ஆனால்,கடந்த […]