தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மிலாதுன் நபிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தில், ‘அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நன்னாளான மீலாதுன் நபித் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! துயர்மிகு சூழலை இளம் வயதிலேயே எதிர்கொண்டு வளர்ந்து, ஏழைகளின் மீது இரக்கம் காட்டுபவராகவும், ஆதரவற்றோரை அரவணைத்து ஆதரவுக் கரம் நீட்டுபவராகவும் கருணையின் அடையாளமாக விளங்கினார். கோபம், பொறாமை, புறம் பேசுதல்” ஆகியவற்றை அறவே துறந்து, பண்புகளுடன் வாழ்வதற்கான […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிகழ்வில், பிரதமர் மோடி, உள்துறை […]
வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதியரசர் திரு.கே.சந்துரு ஆகியோருக்கு முதல்வர் வாழ்த்து. திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதியரசர் திரு.கே.சந்துரு ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஆய்வாளர், பேராசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறனாளரும்; தமிழ் – ஆங்கிலம் இரண்டிலும் தனித்த எழுத்துநடையைக் கொண்டவருமான ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் கனடா இலக்கியத் தோட்டத்தின் ‘இயல்’- வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்வாகியிருப்பதற்கு எனது வாழ்த்துகள்! ‘நானும் நீதிபதி ஆனேன்’ […]
எவிடென்ஸ் கதிர் (எ) ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜ் அவர்களுக்கு ஐரோப்பிய கவுன்சிலின் ரவுல் வாலன்பெர்க் விருது அறிவிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு. அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐரோப்பியக் கவுன்சில் சார்பாக மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகளுக்காக , சிறந்த பணிக்காகவும் தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கான பாதுகாவலராக திகழ்ந்ததற்காகவும் மதுரை எவிடன்ஸ் கதிருக்கு ‘ரவுல் வாலன்பெர்க்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எவிடென்ஸ்’கதிர் (எ) ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜ் அவர்களுக்கு ஐரோப்பிய கவுன்சிலின் ரவுல் வாலன்பெர்க் விருது அறிவிக்கப்பட்டதற்கு மாண்புமிகு தமிழ்நாடு […]