தமிழகபாடநூலில் புதுச்சேரி மாநில வரலாறுகளை இணைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி எழுதிய கடிதத்தில், மதிப்பிற்குரிய முக ஸ்டாலின் அவர்களுக்கு இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். புதுச்சேரி யூனியன் பிரதேசம், இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. என்றாலும், தமிழ்த் தேசிய இனத்தின் பண்பாட்டுக்கூறுகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டதாகப் புதுச்சேரி விளங்குகிறது. கல்வியில், தமிழகத்தின் பாடத்திட்டத்தையே புதுச்சேரி பின்பற்றி வருகிறது. எனவே, […]