புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இன்று காலை சட்டப்பேரவை கூடியதும் சபாநாயகர் செல்வம் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். இதைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், எம்.எஸ் சுவாமிநாதன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ. 4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். ஏப்ரல் […]
ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு முதல்வர் ரங்கசாமி இரண்டரை மணிநேரம் தாமதமாகதான் வந்தாராம். புதுச்சேரி அரசு சார்பில் ஆளுநர் மாளிகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை சுமார் இரண்டரை மணிநேரம் முதல்வர் வருகைக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை அடுத்து முதல்வர் ரங்கசாமி ஆளுநர் மாளிகைக்கு விரைந்துள்ளார். முதலில் […]
ஆட்சியில் இருந்தும் ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஒரு சின்ன முடிவு எடுத்து அதனை செயல்படுத்த முடிவதில்லை. ஒவ்வொரு விஷயத்திற்கும் மத்திய அரசை எதிர்பார்த்து அனுமதி பெற வேண்டியதாக இருக்கிறது. – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. இன்று புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படையாக மேடையிலேயே வெளிப்படுத்திவிட்டார். அதுவும், மத்திய அமைச்சர் மற்றும் ஆளுநர் முன்னிலையிலேயே வெளிப்படுத்திவிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நிகழ்வில் முதல்வர் கூறுகையில், புதுச்சேரியை சிங்கப்பூர் மாதிரி மாற்ற […]
புதுச்சேரி, காரைக்காலில் இன்று மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து சேவை மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 20202-ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் புதுச்சேரியில் மாணவர் சிறப்பு பேருந்து இயக்கப்படாமல் இருந்தது. இதனை அடுத்து இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆன நிலையில் இதுவரை மாணவர் பேருந்து இயக்கப்படவில்லை. புதுச்சேரி, காரைக்காலில் சுமார் 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் இத்திட்டத்தால் பயனடைந்தனர். இந்த நிலையில், சிறப்பு பேருந்து இயக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் பெரும் பாதிப்பு உள்ளாகினார். […]
ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி போனசாக, 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கான பணம் அவரவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி இன்று ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு தீபாவளி போனஸை அறிவித்துள்ளார். அதன்படி, தீபவளையை முன்னிட்டு, ரேஷன் ஆட்டைதாரகளுக்கு ரொக்க பணம் வங்கியில் செலுத்தப்பட உள்ளது. பாப்ஸ்கோ சார்பில் தட்டாஞ்சாவடி பகுதியில் சிறப்பு அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. அதனை, முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து, முதல் […]
புதுச்சேரி முதல்வரை சந்தித்து மனு அளித்த இயக்குனர் பாக்யராஜ். புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்புக்கு விதித்திருந்த வரியை, புதுச்சேரி அரசு சில மாதங்களுக்கு முன் உயர்த்தியது. இதனை குறைக்க வலியுறுத்தி, நடிகர்கள் பார்த்திபன், பிரசாந்த் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், கின்னஸ் சாதனைக்காக ஒன்றரை மணி நேரத்தில் எடுக்கப்படவுள்ள படத்தில் நடிப்பதற்காக, இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் புதுச்சேரி சென்றிருந்தார். படத்தில் நடிப்பதறகாக புதுச்சேரி சென்ற பாக்யராஜ், நடிகர்கள் சங்க நிர்வாகிகளுடன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து […]