சிவாஜி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சிவாஜி கணேசன் அவர்களின் 94-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபங்களும் இணைய பக்கத்தில் அவரது நினைவுகளை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சிவாஜி பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடையாறில் உள்ள மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், மணிமண்டபத்தில் உள்ள அவரது புகைப்படங்களையும் பார்வையிட்டார்.