புதுவை சட்டசபையில் கடந்த சில ஆண்டுகளாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதிலாக மார்ச் மாதத்தில் அரசின் 4 மாத செலவினங்களுக்கு மட்டும் ஒப்புதல் பெறப்படுகிறது. தொடர்ந்து ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதேபோல நடப்பு நிதியாண்டிற்கும் மார்ச் 26ந்தேதி அரசின் 4 மாதங்களுக்கான செலவினங்களுக்கு சட்டசபையில் அனுதி பெறப்பட்டது. முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய கடந்த 4-ந்தேதி சட்டசபை கூடியது. ஆனால் மத்திய உள்துறையிடமிருந்து பட்ஜெட்டிற்கு அனுமதி […]