சென்னை:அரசின் அலுவல்களை தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகை (CM dashboard) திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் அனைத்துத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,அனைத்து துறை சார்ந்த திட்டங்கள்,செயல்பாடுகள் குறித்து நாள்தோறும் தானே நேரடியாக கண்காணிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்படி,முதலமைச்சர் அறையில் மின்ணணு பலகை மூலம் அரசின் திட்டங்களின் நிலையை கண்காணிக்கும் திட்டம் இன்று தொடங்கப்படும் என்றும்,மின்னணு தகவல் […]