மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையர் காவேரி மறைவிற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் திருக்கோவில் இணை ஆணையர் திருமதி காவேரி அவர்கள், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் இன்று காலை மரணமடைந்துவிட்டார் என்ற செய்தியினை அறிந்து பெரிதும் வருந்தினேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் சக அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்விபத்தில் உயிரிழந்த இளைஞர் தீப ராஜன் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார். நாகை மாவட்டம் திருமருகல் அருகே, உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இந்த விழாவின் தேரின் சக்கரத்திற்கு முட்டுக்கட்டை வைத்த போது, சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் தீபராஜன் என்பவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், […]
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநிலத் தலைவர் செய்யது ஹைதர் அலி சிஹாப் அவர்கள் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநிலத் தலைவர் செய்யது ஹைதர் அலி சிஹாப் அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனைக்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய நாட்டின் மதநல்லிணக்கத்திற்கும், சிறுபான்மைச் […]
ஒடிசா முன்னாள் முதல்வர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட். ஒடிசாவில் ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹேமானந்தா பிஸ்வால் உடல் நலக்குறைவு காரணமாக புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார். இவரது பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமானந்த பிஸ்வால் மறைவுற்றதை அறிந்து வேதனையடைந்தேன். […]
விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட மாற்றுத் திறனாளியின் உயிரிழப்பிற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிட உத்தரவு. விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட மாற்றுத் திறனாளியின் உயிரிழப்பிற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிடவும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கோட்டப்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவர். கடந்த நவம்பர் மாதம், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உள்ள மளிகைக் கடை […]
திமுக முன்னாள் எம்.எல்.ஏ வீரபாண்டி ராஜா மறைவுக்கு முதல்வர் இரங்கல். சேலத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக காலமானார். இவர், தனது பிறந்தநாளான இன்று தனது தந்தையின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். பிறந்தநாளன்று உயிரிழந்த ராஜா, திமுக தேர்தல் பணிக்குழுவின் செயலாளராக இருந்துள்ளார். மேலும், சேலம் கிழக்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது […]
நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. இன்று இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான சிவகுமார் – ரேவதி தம்பதியின் மகனான தனுஷ், கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவர் ஆக வேண்டும் கனவுடன் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், அந்த இரண்டு முறையும் அவர் தேர்வில் தோல்வியுற்றார். மேலும், மூன்றாவது […]