காற்று மாசு அதிகரிப்பு காரணமாக டெல்லியில் நாளைமுதல் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து டெல்லி முதல்வர் உத்தரவு. டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வாகன பயன்பாட்டை குறைக்குமாறும், அலுவலகத்திற்கு சென்று பணிபுரிவோர் வீட்டில் இருந்து பணிபுரியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், காற்றுமாசு நாளுக்குநாள் அதிகரித்து தான் வருகிறது. இந்த நிலையில், […]
முழுமையாக தடுப்பு செலுத்தி கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்டா வகை வைரஸ் தீவிரமாகப் பரவி வந்தது. இந்த தொற்றால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்து உள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் […]
காற்று மாசை தடுக்கும் வண்ணம் சில கட்டுப்பாடுகளை விதித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி : சமீப நாட்களாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 471 ஒன்றாக பதிவாகியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், காற்று மாசுபாடு குறித்து, சமூக ஆர்வலர் ஆதித்ய துபே மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் அமன் பங்கா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். […]