இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், கொரோனா பாதிப்புகள் குறித்தும் அதன் கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்தும் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பாரத பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பாரத பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. […]