மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கடிதம் மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன்,பி.மூர்த்தி,மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்,கல்லூரி முதல்வர் ரத்னவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் […]