சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில், பெண் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளதற்கு 10 லட்சம் நிதி வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அருகே இன்று பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில், அரக்கோணத்தை சேர்ந்த பெண் காவலர் கவிதா உயிரிழந்துள்ளார். […]