முதலமைச்சர் கெஜ்ரிவால் ஒரு நக்சலைட் : சுப்பிரமணியன் சுவாமி..!
டெல்லி தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் யாரும் அமைச்சர்களை சந்திப்பதில்லை என்றும், அரசு கொண்டுவரும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிப்பதற்காக நேற்று மாலை சென்ற முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களை, துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, துணை நிலை ஆளுநர் வீட்டின் வரவேற்பறையில், அவர்கள் […]