தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியானது இன்று தொடங்கப்படுகிறது தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் பாடங்களை எளிதில் கற்றுக் கொள்ளவும் தமிழக அரசு சார்பாக கல்வி என்ற தொலைக்காட்சியை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்த கல்வி தொலைக்காட்சிக்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது மாடியில் சுமார் 5 கோடி செலவில் இதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு அரைமணி […]
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் கலந்து கொண்டார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சீராய்வு மனு தொடர்பாகவும், காவிரி வழக்கில் மத்திய அரசுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,தமிழகத்திற்குரிய நிதியை முறையாக அளிக்க வேண்டும் என்று மத்திய நிதிக்குழுவுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி தொடர்பாக நிதிக்குழுத் தலைவர் என்,கே.சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2011ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார் .மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் அக்கடிதத்தில் விளக்கியுள்ளார். நிதிக்குழு மூலம் தொடர்ந்து தமிழகம் தண்டிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர், […]