முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஓராண்டுக்கு தனியார் வசம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியதாக தகவல் வெளியானது. கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பரவலாக வரவேற்பும் கிடைத்தது. இந்த […]
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கப்பாதை பணி நடைபெற்று வந்தபோது கடந்த 12-ஆம் தேதி திடீரென சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுரங்க பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மீட்புப் பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர், எலி வளை தொழிலாளர்கள் […]
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மீண்டும் ஒருமுறை தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளோம். – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். சென்னை சேப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு விஸ்வகர்மா கமிட்டியின் சார்பாக தன்மான நாள் கொண்டாடப்பட்டது. அதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அதில் பேசிய ராமதாஸ், ஆன்லைன் சட்டத்தை தமிழக அரசு இயற்றி விட்டது. ஆனால், ஆளுநர் இன்னும் ஆளுநர் கையெழுத்திடாமல் இருக்கிறது அநியாயம். இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் […]
தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நாளை மாவட்ட ஆட்சிர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வடகிழக்கு பருவமழை 26,27, 28 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை காலை ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் பொன் குமார் என்பவரது திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வருகை தந்துள்ளார். அவரை வரவேற்க திமுக சார்பில் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் இருந்து திமுக கட்சி கொடிகள், அலங்கார தோரணங்கள் நடவு செய்யும் […]
சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விரைவில் கூடவுள்ள சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பேரவையில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டி.டி.வி. தினகரன் பேசும் போது, பிரச்னை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என தெரிவித்தார். சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், […]