டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இதுதொடர்பான சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது. காவிரி டெல்டா பகுதிகளில், குறிப்பாக காவிரிப் படுகையில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நிலவளம், நிலத்தடிநீர் வளம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு […]