அமெரிக்கா அட்லாண்டாவில் உள்ள மிருகக்காட்சிசாலையில் 19 கொரில்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுதும் குறைந்தபாடில்லை. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சிங்கம், குரங்கு என விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா மிருகக்காட்சி சாலையில் உள்ள கொரில்லாக்களுக்கும் தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட கொரில்லாக்களுக்கு லேசான இருமல் மற்றும் மூக்கு […]