Tag: மியான்மர்

முதல்வரின் அதிரடி நடவடிக்கையால் அடுத்தடுத்து தாயகம் திரும்பும் தமிழர்கள்.!

மியான்மரில் சிக்கி தவித்த தமிழர்களில் ஏற்கனவே 18 தமிழர்கள் தமிழகம் வந்துள்ளனர். இன்று இரண்டாம் கட்டமாக 8 பேர் வந்துள்ளனர். நாளை 10 பேர் வரவுள்ளனர்.  வெளிநாடு வேலைக்கு சென்ற தமிழர்கள், தாய்லாந்து மற்றும் மியான்மர் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு கம்பியூட்டர் வேலை என்று கூறிவிட்டு, பின்னர் சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்த முயன்றுள்ளனர். இதனை தமிழக அரசுக்கு அவர்கள் தெரியப்படுத்தி தங்களை மீட்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையின் பேரில் […]

- 3 Min Read
Default Image

போலி ஏஜென்டுகள் மூலமாக வெளி நாட்டுக்கு வேலைக்கு செல்லாதீர்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான்

போலி ஏஜென்டுகள் மூலமாக வெளி நாட்டுக்கு வேலைக்கு செல்லாதீர்கள் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.  தாய்லாந்துக்கு வேலைக்காக சென்று மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்களில் 13 பேரை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்ட தமிழர்கள் நேற்று இரவு தாயகம் திரும்பினார். இவர்களை, அமைச்சர் செஞ்சி மஸ்தான் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செஞ்சி […]

- 2 Min Read
Default Image

மியான்மரில் இருந்து தமிழர்களை மீட்க பயண செலவை தமிழக அரசு ஏற்கும்.!

மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை தாய்லாந்தில் இருந்து தமிழகம் கொண்டு வர, முழு பயண செலவையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.    தனியார் ஆள்சேர்ப்பு நிறுவனம் மூலம் தாய்லாந்து வேலைக்கு அழைத்து செல்லப்பட்ட 50 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்கள் சட்டவிரோத வேலைக்காக மியான்மர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு சட்டவிரோத வேலை என்று தெரிந்தவுடன் வேலை செய்ய மறுத்துள்ளனர். இதனை அடுத்து, அங்கு தவித்த தமிழகர்கள் தங்களை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை […]

#DMK 3 Min Read
Default Image

#BREAKING : மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்…!

மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.  மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து செல்ல  வேண்டும் என அங்குள்ள தமிழர்கள் வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, […]

#MKStalin 2 Min Read
Default Image

மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு …!

மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூகியின் ஆட்சி கடந்தாண்டு கலைக்கப்பட்டு, மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன் பின் வீடு காவலில் வைக்கப்பட்டிருந்த சூகி மீது 11 ஊழல் குற்றச்சாட்டு புகார் உள்ளது. இந்நிலையில், நோபல் பரிசு பெற்ற ஒருவருக்கு எதிரான வழக்கில் 600000 டாலர் பணம் பெற்றதாக சூகி மீதுள்ள புகார் தொடர்பான தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன் படி அந்நாட்டு நீதிமன்றம் மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவர் சூகிக்கு எதிராக […]

#Arrest 2 Min Read
Default Image

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை!எதற்காக தெரியுமா?!

மியான்மர்:தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு  4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராணுவத்திற்கு எதிராக கருத்து வேறுபாடுகளை தூண்டியதற்காகவும், கொரோனா விதிகளை மீறியதற்காகவும்,மேலும் ஆட்சியில் இருந்தபோது தொழில்நுட்ப சட்டம்,ரகசிய தகவல் விதிமுறைகளை மீறியதாகவும் கூறி ஆங் சான் சூகிக்கு இத்தகைய தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

#Myanmar 3 Min Read
Default Image

#EarthQuake : வங்கதேசம் மற்றும் மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

 வங்கதேசம் மற்றும் மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். இன்று அதிகாலை 5:15 மணியளவில் வங்கதேச – மியான்மர் எல்லையான சிட்டகாங்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிஃடர் அளவுகோலில் 6.3-ஆக பதிவாகியுள்ளது. மேலும், மிசோரத்திலும், தென்சவாலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில், 6.1 ஆக பதிவாகியுள்ளது.

#Earthquake 1 Min Read
Default Image

மியான்மரில் மிதமான நிலநடுக்கம்..!

மியான்மர்  நாட்டில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்று அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இப்பகுதியிலிருந்து 82 கிமீ தொலைவில் பூமிக்கு அடியில் மையம் கொண்டு இருந்துள்ளது. மேலும், இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

#Myanmar 2 Min Read
Default Image