பீகாரில் 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 20 பேர் பலி, ₹4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு. பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் நேற்று(ஜூலை 26) தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் கைமூர், போஜ்பூர், பாட்னா, ஜெகனாபாத், அர்வால், ரோஹ்தாஸ், சிவன் மற்றும் அவுரங்காபாத் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவில் உள்ள வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரன் கிஷன்கன்ச் என்ற இடத்தில் கனமழை காரணமாக மின்னல் தாக்கியுள்ளது. இந்த மின்னல் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தெரிவித்த அம்மாவட்ட […]
மேற்கு வாங்காளம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் பாங்குரா மாவட்டத்தில் கனமழை காரணமாக மின்னல் தாக்கியதில் 4 பேரும், ஹூக்லி மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். மேற்கு மித்னாபூர், பிர்பூம் மற்றும் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் மின்னலுக்கு` பலியாகியுள்ளனர். மேலும், பலர் மின்னல் தக்கியதில் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.