சென்னை பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது.அப்போது ரயிலில் இருந்து ஓட்டுநர் வெளியே குதித்தததால் அவருக்கு காயம் ஏற்பட்டது.எனினும்,ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் ஏற்படவில்லை. இதனையடுத்து,இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து,ரயில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதனிடையே,9 மணி நேரத்துக்கும் மேலான கடும் முயற்சிக்கு பிறகு விபத்துக்குள்ளான […]