வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை பகுதிகளில் பெய்த கனமழை பொதுமக்கள் தினசரி வாழ்வை வெகுவாக பாதித்துள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் திறந்துவிடப்பட்டன. மழைநீர் சாலைகளில் தேங்கியது. இதனால் இதுவரை மழைநீர் தேங்காத இடங்களில் கூட தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. அதனை மீட்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள், மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில், குறிப்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரையில் […]