மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி,டி.டி.வி. தினகரனால், திவாகரனுக்கு ஏற்பட்டுள்ள நிலை, நாளை சசிகலாவுக்கும் ஏற்படக் கூடும் என விமர்சித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்க பொதுக்கூட்டம் தஞ்சாவூர் ஆபிரகாம்பண்டிதர் சாலையில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, திவாகரனுக்கு […]