கனமழை எதிரொலியால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 4 மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரை தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு முதல் படிப்படியாக மழை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எதிரொலி..! திருவள்ளூர் […]
மிகஜாம் புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் நிர்வங்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 330 கிமீ தெற்கு […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்ய ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு என 3 மாவட்டத்திற்கும் நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என 4 மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனால் நிர்வாக காரணங்களுக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நெருங்கும் புயல்.! […]