40 கல்லூரி விடுதிகளுக்கு போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் வழங்க ரூ.10 லட்சம் செலவில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. முன்னதாக நடைபெற்ற 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது “கல்லூரி விடுதிகளில் தங்கி பயின்று வரும் மாணவ, மாணவியர் வேலை வாய்ப்புக்கான போட்டி தேர்வுகளில் பங்கேற்பதை ஊக்கப்படுத்தும் பொருட்டு, விடுபட்டுள்ள 40 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்லூரி விடுதிகளுக்கு, போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் 10 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்” […]
சென்னை:தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் 3 விடுதிகளுக்கு பரிசுகள் வழங்க நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் 2021-2022 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் படி, ஆண்டு தோறும் மாவட்ட அளவில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் சிறந்த மூன்று விடுதிகளை தேர்வு செய்து பரிசுகள் வழங்க நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக […]
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக,பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த செப்டம்பர் […]