பிரதமர் மோடி உயிருக்கு மாவோயிஸ்டுகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக புனே போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கைதான மாவோயிஸ்டிடம் இருந்து கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மந்திரிசபை செயலக அதிகாரிகள் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். பிரதமருக்கு சிறப்பு பாதுகாப்பு படை வீர்கள் (எஸ்.பி.ஜி.) மற்றும் நெருக்கமான பாதுகாப்பு படை வீரர்கள் (சி.பி.ஜி.) ஆகியோர் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். மாவோயிஸ்டுகள் மிரட்டலைத் தொடர்ந்து பிரதமருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு […]