திருவண்ணாமலையில் பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டால், அதற்கு அனுமதி கொடுத்த அணைத்து அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் இன்று தனது ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலை துறையினர், நகராட்சி ஊழியர்கள் என அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் பேசுகையில், ‘ திருவண்ணமலை ஓர் ஆன்மீக நகரம். நாள் தோறும் இங்கு வெவ்வேறு ஊர்களில் […]