குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்க கூடாது என ரேஷன்கடைகளுக்கு அறிவுறுத்தல். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையின்படி, குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்க கூடாது. ஆதார் நகலை நுகர்வோரிடம் பெற கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணிகளுக்கு தகுதியான ஆட்களை நிரப்ப தமிழக அரசு சார்பில் தற்போது மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 2,78 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான ஆட்களை நிரப்ப தமிழக அரசு சார்பில் வருவாய்துறை ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நவம்பர் 14ஆம் தேதி பரிசளிக்கப்பட்டு, முறையான நேர்காணல் நடத்தில்டிசம்பர் 19ஆம் தேதி பணிநியமன ஆணைகளை வழங்கிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு நீர்நிலைக்கு ஒட்டிய இடங்களில் வளர்ந்து நிற்கும் மரங்கள் கருவேலை மரங்கள். இந்த மரங்கள் நிலத்தில் உள்ள நீரை உறிஞ்சி நீர்வளத்தை குறைக்கும் தன்மை கொண்டது. இதனை தடுக்க அரசும், தன்னார்வ அமைப்புகளும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் அவ்வப்போது ஈடுபடும். நீர் ஆதாரத்தை பாதிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற சென்னை உய்ரநீதிமன்றம் […]
காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை. தமிழகத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை அரசு தொடக்க பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. அதில், சிற்றுண்டி வகைகளிலிருந்து ஏதாவது ஒரு சிற்றுண்டியினை அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் வழங்க வேண்டும். ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது 2 நாட்களிலாவது, அந்த பகுதிகளில் விளையும் சிறுதானிகள் அடிப்படையில் சிற்றுண்டி வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு […]
கரூர்:தலைக்கவசம் அணியாமல் வந்தால் அரசு அலுவலகங்களில் எந்தவித சேவையையும் பெற முடியாது என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. வருகின்ற 18 ஆம் தேதி முதல் இரு சக்கரவாகனங்களில் அரசு அலுவலகங்களுக்கு வருபவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என கரூர் மாவட்ட அட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாறாக, தலைக்கவசம் அணியாமல் வந்தால் அரசு அலுவலகங்களில் எந்தவித சேவையையும் பெற முடியாது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குறிப்பாக,டாஸ்மாக் கடைகளுக்கு தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு மது பாட்டில் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, தற்போது அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி-க்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
கனமழை காரணமாக நாளை 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனால், பல மாவட்டங்களில் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கனமழை காரணமாக, நாளை தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, […]
கனமழை காரணமாக தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு அளித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக கடலோர மாவட்டங்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. அந்த வகையில், கனமழை காரணமாக தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு […]
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் 28 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல மாவட்டங்களில் கனமழை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனையடுத்து, மயிலாடுதுறை,தேனி, திண்டுக்கல்,விருதுநகர்,தென்காசி, திருநெல்வேலி,தூத்துக்குடி, தஞ்சாவூர்,அரியலூர்,பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கும், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, கடலூர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய […]
தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நாளை மாவட்ட ஆட்சிர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வடகிழக்கு பருவமழை 26,27, 28 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை காலை ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
சொத்து வரி செலுத்தாதவர்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த ஒரு தனியார் பொறியியல் கல்லூரி,கூடுதல் சொத்து வரியை செலுத்தும்படி,நாமக்கல் தட்டான்குட்டை கிராம பஞ்சாயத்து சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதனை எதிர்த்து அக்கல்லூரி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்,இந்த வழக்கு,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, அதிக கட்டணம் வசூலித்து வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் வரி […]
தூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சேதமடைந்த பகுதிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு பார்வையிட்டார். தூத்துக்குடியில் அமைதி நிலை திரும்பியதை அடுத்து, கடந்த 21ம் தேதி பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்தார். மாவட்டம் முழுவதும் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பினாலும், போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த […]
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் அரசு உறுதியாக எடுக்கும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ஆலை இயங்கவில்லை என்று கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையின் மின்சார இணைப்பு கடந்த 24 -ஆம் தேதி அன்று அதிகாலை துண்டிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் தொழிற்சாலை சுயமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும், மின்வாரியம் மூலமே பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருவதால், […]
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இயல்புநிலை திரும்புவதையடுத்து 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. கடந்த 5 நாட்களாக தூத்துக்குடியில் அசாதாரண சூழல் நிலவியதால் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்