கடந்த சில நாட்களுக்கு முன் மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதிலும், சென்னையில் பெய்த கனமழை அங்கு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் சேனையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அதனை தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள், மீட்புக்குழுவினர் என ஆயிரக்கணக்கானோர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வந்தனர். பொங்கல் பண்டிகை – அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்…! இந்த மழை வெள்ளத்தில் […]
மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள். மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றுள்ள அனைவரும் தங்களது ஆதார் எண்ணை அடையாள அட்டை எண்ணுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இணைக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைத்து திட்டங்களிலும் பயனடைய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றுள்ள அனைவரும் தங்களது […]
மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலாளரை தலைவராக கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து அரசு உத்தரவு. அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலாளரை தலைவராக கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் துறை, சட்டத்துறை செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 4% இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை […]
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர். இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், 6 மாவட்டங்களுக்கு நடமாடும் மறுவாழ்வு சிகிச்சை வாகனத்தையும் கொடியசைத்து தொடக்கி வைத்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை இன்று திறப்பு. சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை வசதியை இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் திறப்பு வைக்கிறார். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அறிவிப்பில், சென்னை மெரினா கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதை இன்று திறந்து வைக்கப்பட உள்ளது. மெரினா கடற்கரை செல்லும், மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிப்பதில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். […]
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம், வீடியோ கால் பேச்சுவார்த்தை நடத்தை போராட்டத்தை முடித்துவைத்த அமைச்சர் நாசர். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தை டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் முகவர் விண்ணப்பங்களை முறையாக பரிசீலிக்காமல் மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிக்க வைப்பதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையா போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மாற்றுத்திறனாளிகள் தரப்பில், மாற்றுத் திறனாளிகள் ஆவின் நிறுவனத்தால் […]
வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. கிராமங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் வீடு வழங்க கோரியும், நகரங்களில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு வழங்க கோரியும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத் தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கையின் போது […]
2,213 புதிய பேருந்துகளையும், 500 மின்கல பேருந்துகளை கொள்முதல் செய்ய போக்குவரத்துக் கழகத்திற்கு அனுமதி. கடந்த 2016-ஆம் ஆண்டு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமார், சட்டப்படி மாற்றுத்திறனாளிகள் அணுகு முறையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக்கோரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய […]
மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்ய முதுநிலை திருக்கோயில் அலுவலர்களுக்கு அரசு உத்தரவு. தமிழகத்தில் 48 முதுநிலை திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்ய முதுநிலை திருக்கோயில் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் திருக்கோயில்களில் சக்கர நாற்காலி வசதி […]
பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குனர் பாக்யராஜ் கூறியிருந்த நிலையில், மன்னிப்பு கோரியுள்ளார். சென்னை கமலாலயத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாக்கியராஜ், இந்தியாவுக்கு மோடி போன்ற எனர்ஜியான பிரதமர் தான் தேவை. பிரதமர் மோடி பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது. அவர் வெளிநாடு செல்வதை சிலர் கிண்டல் செய்கின்றனர். ஆனால் இந்த வயதிலும் இத்தனை நாடுகளுக்கு எப்படி பயணிக்கிறார்? உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார் என்று வியக்கிறேன். […]
சொற்ப அளவிலான உதவித்தொகை வழங்கி மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாற்றுதிறனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை வழங்குவதில் பார்வை மாற்று திறனாளிகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும், பிற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுவது போல ஒரே மாதிரியான தொகை வழங்கப்பட வேண்டும் என்றும், அன்றாட செலவுகளை எதிர்கொள்ளும் வகையில் ஒரு நியாயமான தொகையை வழங்க வேண்டும் என்றும், கடந்த 2018- ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த […]
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவ நிகழ்ச்சியின் போது மாற்றுத்திறனாளிகளை அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு. மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவ நிகழ்ச்சியின் போது மாற்றுத்திறனாளிகளை அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழாவில், “அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தினை” கண்டுகளிக்கும் விதமாக 2018 ஆம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனி இடவசதி சிறப்பாக ஏற்பாடு செய்யவும், இவ்வாய்ப்பினை ஆண்டு தோறும் மாவட்ட […]
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வங்கி கடன் மேளா நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக,தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “கடந்த மாதம் 15 ஆம் தேதி தலைமைச் செயலர் அவர்களின் ஆய்வுக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் (PMEGP), வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டம் (UYEGP), சிறுதொழில்கள் மற்றும் பெட்டிக் கடை […]
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சலுகை கோரும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு. தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள், உதவியாளர் உள்ளிட்ட ஏதேனும் சலுகை கோர விரும்பினால் வரும் 13-ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும், நோயின்தன்மை, தேவையான சலுகை குறித்து உரிய மருத்துவர் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் துறை மானிய கோரிக்கை: தமிழகத்தில் சுமார் 13 லட்சம் […]
இன்று முதல் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, செப்.1-ஆம் தேதி முதல் பள்ளிகள் சுழற்சி முறையில் திறக்கப்படவுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் தொடங்குவதற்கு முன் ஆசிரியர்கள் அனைவரும் தடுஊசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே பள்ளிகளுக்குள் ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த […]