மாண்டஸ் புயலில் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலம் நாளை மீண்டும் திறக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் உறுதியளித்தார். அன்மையில் வங்கக்கடலில் உருவாகி மாமல்லபுரம் கடற்கரையில் கரையை கடந்த மாண்டஸ் புயல் காரணமாக வீசிய பலத்த காற்றின் காரணமாக புதுச்சேரி முதல் சென்னை என வங்கக்கடல் கரையோர பகுதிகளில் பல்வேறு இடங்கள் சேதமடைந்தன. இதில் சென்னை மெரினாவில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அந்த புதிய சிறப்பு பலமானது மாண்டஸ் புயலில் சேதமடைந்தது. இணையத்தில் விமர்சனம் […]
சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிக்காலுக்கான சிறப்பு பாதை திறக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு தூரத்து கனவாகயிருந்தவொன்று, அலைகள் வந்து மோதிச்செல்லும் சென்னை கடற்கரையை அருகில் சென்று பார்ப்பது. சாலைக்கும், கடற்கரைக்கும் இடைப்பட்ட […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016-இன் படி,மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தை மாற்றியமைத்தல் தொடர்பாக ஆணை வெளியிடப்படுகிறது.அதன்படி,ஒவ்வொரு மாநிலத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் ஏற்படுத்தப்பட வேண்டும். முதல்வர் அவர்கள் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் ஏற்படுத்தப்பட்டது.இதில் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை,மாற்றுதிறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் உள்ளிட்டோர் சார் உறுப்பினர்களாக […]
மெரினா கடற்கரையில் மாற்று திறனாளிகளுக்கான மரப்பாதை திறப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு. சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்காக பல பிரத்தியேகமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்காக மெரினா கடற்கரையில் மரப்பாதையை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின் மற்றும் […]