தமிழகத்தில் ஐந்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையினை ரூ.1,500 -லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்க நிர்வாக ஒப்புதல் மற்றும் ரூ.31,07,91,000 நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கான பதிலுரையில் 07.01.2022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை குறித்து பின்வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது: “கடுமையான இயலாமை, கடுமையான அறிவுசார் குறைபாடு, […]
மத்திய அரசுப் பணியில் உள்ள மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி ஊழியர்கள் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு. இந்தியாவில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரிக்கும் நிலையில், மத்திய அரசு பணிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி ஊழியர்கள் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31-ஆம் தேதி வரை கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணிநேரத்தில் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார். மேலும், அலுவல் கூட்டங்களை காணொலி மூலம் மட்டுமே […]
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் செவித்திறன் பாதிப்படைந்த மாற்று திறனாளிகளுக்கு செயலிகளுடன் திறன்பேசிகள் வழங்குவது தொடர்பான அரசாணை வெளியீடு இதுகுறித்து வெளியான அறிக்கையில், மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரின் கடிதத்தில் 2021-22 ம் நிதியாண்டில் வரவு செலவு திட்டத்தில் இத்திட்டத்திற்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 2021 -2022 நிதி ஆண்டிலும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு திறன்பேசிகள் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட ரூ.10 […]
RIGHTS திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.2.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. உலகிலேயே முன்மாதிரியாக மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் RIGHTS திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.2.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு விடுபடாமல் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் ரூ.1702 கோடியில் RIGHTS திட்டம் செய்லபடுத்தப்பட உள்ளது. உலகவங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு ஆலோசகர்களை நியமிக்க நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் […]
தொலைதூரக் கல்வியில் பி.ஏ.,எம்.ஏ.,பி.காம். உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100% கட்டணம் இலவசம் என்றும் புதுவைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தொலைதூரக் கல்வியில் பி.ஏ.,எம்.ஏ.,பி.காம்.,எம்.பி.ஏ உள்ளிட்ட (B.A,M.A,BBA, MBA) படிப்புகளில் சேர மாணவர்களிடம் இருந்து புதுவைப் பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. அதன்படி, https://dde.pondiuni.edu.in/notifications/admissions-2021-22-apply-online/ என்ற இணையதளத்தில் டிசம்பர் 15 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும்,அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100% கட்டணம் இலவசம் என்றும் புதுவைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதைப்போல,3 ஆம் பாலினத்தவர்கள்,கணவனை இழந்தவர்கள், கைதிகள், ராணுவத்தினர், […]
தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் வேண்டுகோளின் பேரில் பதில்களை மீண்டும் படிக்கவும்,பதில்களை மாற்றவும் அல்லது நீக்கவும் அனுமதி என்று தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆகியவை பெஞ்ச்மார்க் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டன. இந்த வழிகாட்டுதல்கள் “மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வுகளை நடத்துவதற்கான தமிழ்நாடு வழிகாட்டுதல்கள், 2021” என்று அழைக்கப்படலாம்.அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு எழுத்தாளர்/வாசகர்/ஆய்வக உதவியாளரின் உதவி தேவைப்படும்,கல்வி, ஆட்சேர்ப்பு மற்றும் பிற நோக்கங்களுக்காக தமிழ்நாடு மாநிலத்தின் எல்லைக்குள் […]
12ஆம் வகுப்பை தொடர்ந்து, 10, 11ஆம் வகுப்பு மாற்றுத் திறனாளி தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 2021-ல் நடைபெறவுள்ள 10 மற்றும் 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது நிலவிவரும் கோவிட்-19 நோய் தொற்று பரவல் காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.