பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்களை ஏவுவதற்காக அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு சுமார் 10 ஆயிரத்து 900 கோடி ரூபாய் நிதியை இஸ்ரோவுக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரோவின் குண்டுப்பையன் என்றும் அழைக்கப்படுவதும் சுமார் 4 டன் எடையிலான செயற்கைக் கோள்களை சுமந்து செல்வதுமான 10 ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்களை ஏவுவதற்கு மத்திய அமைச்சரவை 4 ஆயிரத்து 338 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர […]