Su Venkatesan : அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு சு.வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மதுரை மக்களவைத் தொகுதியின் அதிமுக சார்பில் டாக்டர் சரவணன் என்பவரும், திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசனும் போட்டியிடுகின்றனர். கடந்த 2019 மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி பெற்று மதுரை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் […]
நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க குழு அமைத்து வருகிறது. அந்த வகையில் திமுக, அதிமுக, மற்றும் […]
திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தலைமையில் இன்று திருவாரூர் சன்னாநல்லூர் உட்பட 3 இடங்களிலும், நாகையில் 2 இடங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை தென்னக ரயில்வே புறக்கணிப்பதாகவும், குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ரயில் நிற்காமல் செல்கிறது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருவாரூர் , நாகை மாவட்டங்களில் விரைவுரயில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட 32 கோரிக்கைகளை முன்வைத்து, இன்று திருவாரூர் சன்னாநல்லூர் உட்பட […]
மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் பேரணியையும் எங்களையும் ஒப்பிட முடியாது. எனவே, மதநல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் விசிக, இடதுசாரிகள் மனு அளித்துள்ளனர். காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு , மதசார்பின்மையை வலியுறுத்தி சமய நல்லிணக்க மனிதசங்கிலி பேரணி நடத்த விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகளான மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் காட்சிகள் என மூன்று கட்சியினரும் ஒன்றாக காவல்துறையிடம் அனுமதி கேட்டு இருந்தனர் […]
பாபர் மசூதி இடிப்புக்கு அம்பேத்கார் நினைவு நாளை தேர்வு செய்தது போல, தமிழக RSS அமைப்பு ஊர்வலத்திற்கு காந்தி பிறந்தநாளை தேர்வு செய்துள்ளனர். – விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டிருந்தார். வரும் அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த உள்ளனர். இந்த ஊரவலத்திற்கு அனுமதி கொடுத்ததை திரும்ப பெறுமாறு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார் இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்ள கேரளா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பலத்த வரவேற்பு. கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு குறித்து உரையாட உள்ள நிலையில், இந்த மாநாட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு இந்த மாநாட்டில் கலந்து […]
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்,சிவகுமார் என்பவரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கியிருந்த நிலையில்,அதற்கு தவணை தொகையை செலுத்த சென்ற அவரது மகளை,சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் பலாத்காரம் செய்து,வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றினர். இதனையடுத்து,மனமுடைந்த அப்பெண்ணின் தாயார் இந்த பதிவை நீக்க உதவிடக் கோரி,அப்பகுதியை சேர்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் வேலுசாமி அவர்களிடம் கெஞ்சியதை அடுத்து,அப்பெண்ணுக்கு உதவியாக,போலீசில் புகார் அளித்துவிட்டு இரவில் வீடு திரும்பிய வேலுசாமி அவர்களை […]
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, நாளை மேயர்,துணை மேயர், சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு திமுக மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1 மாநகராட்சி துணை தலைவர், 2 நகராட்சி […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை துணை மேயர் பதவியை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில்,அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து,மேயர்,துணை மேயர்,சேர்மன் மற்றும் துணை சேர்மன் […]
மதமோதலை உருவாக்கும் வகையில் கோவையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் உருவாக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொது செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை. மதமோதலை உருவாக்கும் வகையில் கோவையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து காவல்துறையும் தமிழக அரசும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொது செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, விளாங்குறிச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கோவையில் திட்டுமிட்டு மதமோதலை […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று ஆசிரியரும்,தோழர் என்ஆர் என அழைக்கப்பட்ட என்.ராமகிருஷ்ணன் அவர்கள் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும்,சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா அவர்களின் சகோதரரும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த எழுத்தாளருமான என்.ராமகிருஷ்ணன் அவர்கள் நேற்று இரவு மதுரையில் காலமானார். இதனையடுத்து,அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 82 வயதான என்.ராமகிருஷ்ணன் அவர்கள்,தமிழில் 76 நூல்கள், ஆங்கிலத்தில் 10 நூல்கள், 25-க்கும் மேற்பட்ட மொழியாக்கங்கள் என வாழும் பல்கலைக்கழகமாகவே […]
கேரளா மாநிலம், பத்தனம்திட்டா அருகே திருவாளா பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் சந்தீப்குமார் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கேரளா மாநிலம், பத்தனம்திட்டா அருகே திருவாளா பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் சந்தீப்குமார் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சி ஆர்.எஸ்.எஸ்.-ஐ சேர்ந்தவர்கள் தான் சந்தீப் கொலை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். அவர்களது குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த கேரள பாஜக, சந்தீப்குமார் கொலைக்கும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் எந்த தொடர்பும் […]
நடிகர் சூர்யா அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, திரைக்கு வந்துள்ள ஜெய் பீம் திரைப்படமானது அரசியல் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் பலரையும் கவர்ந்திழுத்துள்ளது. அந்த வகையில், இப்படம் குறித்த சில எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும், அதிகமான நேர்மறையான விமர்சனங்கள் தான் எழுந்துள்ளது. இப்படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு பலரும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,நடிகர் சூர்யா அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் […]
கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநில முன்னாள் முதல்வரும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்கள்,கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் செயல்படாமல் இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார், பின்னர் தனது சொந்த ஊருக்குத் தளம் மாறினார்.தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன் அருண்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்,அச்சுதானந்தன் அவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு […]
இனியாவது மோடி அரசு மனிதத்தன்மையற்ற தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். நீட் விலக்கு மசோதாவிற்கு தாமதமில்லாமல் ஒப்புதல் தர வேண்டும். தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று, நீட் தேர்வுக்கு எதிரான சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்ட பேரவையில் நீட் நுழைவு தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்தார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூடை கண்டித்து கண்டன பேரணியும் ,பொதுக்கூட்டமும் நடத்த அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு. கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் […]