கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃப்ரான்ஸ் மற்றும் ஜிம்னி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஃப்ரான்ஸ் காரின் விற்பனை ஏப்ரல் மாதமும் ஜிம்னி காரின் விற்பனை ஜூன் மாதமும் தொடங்கிய நிலையில் இந்திய SUV கார் விற்பனையில் மாருதி முதலிடத்தை பிடித்தது. ஆனால் செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து மாருதி SUV கார்களின் விற்பனை சரிய ஆரம்பித்த நிலையில் முதலிடத்தை மஹிந்திரா பிடித்தது. மேலும், மஹிந்தரா, டாடா, ஹூண்டாய் நிறுவனத்திற்கு அடுத்து நான்காவது இடத்துக்கு மாருதி […]
மாருதி நிறுவனம் தயாரித்த கார்களில் சில சிக்கல் இருப்பதாகவும் இதனால் 9,125 கார்களை திரும்ப பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நவம்பர் 2ம் தேதி முதல் 28ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட 9,125 வாகனங்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது. இதில் சியாஸ், பிரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய மாடல் கார்களில் சிக்கல் இருப்பதாகவும் மாருதி தெரிவித்துள்ளது. இதுவரை தயாரிக்கப்பட்ட கார்களில் முன் வரிசை இருக்கை சீட்பெல்ட்களின் தோள்பட்டை உயரத்தை சரிசெய்யும் […]
மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 34ஆண்டுகளில் 2கோடி வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. ஜப்பானின் சுசுகி மோட்டார் நிறுவனம் 1983ஆம் ஆண்டு இந்தியாவின் மாருதி உத்யோக் நிறுவனத்துடன் இணைந்து வாகன உற்பத்தியைத் தொடங்கியது. தொடக்கத்தில் மாருதி 800 வகைக் கார்களை உற்பத்தி செய்த இந்நிறுவனம் இப்போது டிசயர், பலனோ, ஆல்டோ, சுவிப்ட், வேகன்ஆர் உள்ளிட்ட 16வகை வாகனங்களைத் தயாரித்து வருகிறது. 34ஆண்டுகளில் மொத்தம் 2கோடி வாகனங்களைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது. இந்த எண்ணிக்கையில் ஆல்டோ வகைக் கார்கள் மட்டும் […]