நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவானது கடந்த மாதம் 24ந்தேதி கொடியேற்றத்தோடு வெகுச்சிறப்பாக தொடங்கியது. பின் அம்மன் குளத்தில் இருந்து கம்பம் நகர் வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டதுடன் தொடர்ந்து காப்புக்கட்டி பக்தர்கள் விரதம் இருந்தனர்.இந்நிலையில் திருவிழான்று அதிகாலையில் இருந்து பிற்பகல் வரை பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து வந்த நிலையில் அலகு குத்தியும், மாறு வேடம் அணிந்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேளதாளம் முழங்க, தாம்பூலத்தில் அன்னைக்கு அர்ச்சனை பொருட்களை மஞ்சள் துணியால் கட்டி […]
சமயபுரம் மாரியம்மன் என்றலே தனிச்சிறப்பு தான் அதிலும் அன்னையின் கருணை அளவற்றது.இக்கோவிலில் தான் அன்னை அஷ்ட புஜங்களுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள்.அன்னையின் இந்த திருக்காட்சி வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத ஒரு அரிய திருக்காட்சியாகும்.மாரியம்மன் திரு வடிவங்களில் சமயபுரம் தான் ஆதி பீடம் ஆகவே தான் அன்னை மகாமாரி பதம் மாறி சிவ பதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்பு திருஉருவமாக காட்சியாக அருள்பாலிக்கிறார். மும்மூர்த்திகளை காக்கவும், அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் தன்னை […]
அர்ஜுனனின் ஆறும் வைப்பாறு ஆறும் ஓடும் பாதைகளுக்கு இடையே அமைந்துள்ளது இருக்கன்குடி மாரியம்மன் ஆலையம். இரு ஆறுகளும் கங்கையாக கருதப்படுவதால் ‘இரு கங்கை குடி’ என்றே கூறப்பட்டு வந்தது. அது மருவி இருக்கன்குடி என பெயர் வந்தது. பஞ்சபாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் கடந்து வந்த கரடு முரடான பாதையில் மகாலிங்க மலை அடிவாரத்தை அடைந்தனர். அப்போது, உடனிருந்தவர்கள் களைப்பால் நீராட வேண்டும் என நினைத்தார்கள். ஆனால், அங்கு நீரோடை நதிகள் எதுவும் இல்லை. […]
சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கை என்ற பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதனிடையே சமயபுரம் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் சார்பு கோவிலாக இருந்து உள்ளது.மேலும் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு தங்கையும் சமயபுரத்தின் நாயகியுமாக ஒய்யார நடைபோட்டு வரும் மாரியம்மனுக்கு அண்ணனும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருமானவர் தன் கோவிலில் இருந்து பட்டுப்புடவை மற்றும் வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழ வகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை வழங்கி வருவது வழக்கம்.இதன் […]
சமயபுரம் மாரியம்மன் சித்திரை தேர்த் திருவிழா – சித்திரை 4, (17/04/2018) செவ்வாய்கிழமை காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருத்தேர் வடம் பிடித்தல். அன்று இரவு 9.00 மணிக்கு திருத்தேரிலிருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சி. ( அழைப்பிதழ் இனைத்துள்ளேன்) கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு 17/04/2018. சித்திரை திருத்தேர் விழா. அம்மனுக்கு மிகமிக விசேஷமானது. சக்தி வழிபாட்டிற்குரிய ஸ்தலங்கள் பலவற்றில் தமிழகத்திலே ‘சாய்ஞ்சா கண்ணபுரம், […]