சாலையை கடக்கும் போது நகரும் கார் ஒன்றை தாண்டி குதித்து ஸ்டண்ட் செய்த மான்.. வைரலாகும் வீடியோ! நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாலையை கடக்க முயலும் சில மான்களில் ஒன்று அசாதாரணமாக ஓடும் கார் ஒன்றை தாண்டி குதித்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இச்சம்பவம் மிச்சிகன் மாநில காவல்துறையினரின் வாகனத்தில் பொருத்தப்பட்ட கேமராவில் ரெகார்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ 4K பார்வையாளர்களுடன் […]
ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பரவியுள்ள நிலையில், தற்போது கனடாவில் உள்ள ஆல்பர்ட் மாகாணத்தில் மான்கள் இடையே புதிய ஜாம்பி நோய் உருவாகி உள்ளதாக அமெரிக்க நோய்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூளையின் கட்டுப்பாட்டை இழந்து, அசாதாரணமாக செயல்பட தொடங்குமாம். அதன் அறிகுறிகள் வித்தியாசமானதாக இருப்பதாகவும் மருத்துவ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனடாவில் உள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
சென்னை ஐஐடியில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான் உயிரிந்துள்ளது. மேலும் 2 மான்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மான்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மானின் உடல் , நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்யப்பட்டது. மான்களுக்கு நாய்கள் மூலம் ஆந்த்ராக்ஸ் நோய் பரவுகிறது என கால்நடை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். விலங்குகளை யாரும் தொடக் கூடாது, உணவு வழங்க கூடாது என்று ஐஐடி நிர்வாகம், கிண்டி தேசிய பூங்கா […]