தமிழக முன்னால் பாஜக தலைவரும் தற்போதைய தெலுங்கானா மாநில ஆளுநருமான திருமதி. தமிழிசை சவுந்திரராஜன்,அவர்கள் ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு, அந்த மாநில சட்டசபையின் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொண்டார். அப்போது அவரை அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ், சபாநாயகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.சட்டசபை கூட்டத்தில், அனைவருக்கும் வணக்கம் என தமிழில் துவங்கிய கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் , ஆங்கிலத்தில் உரையாற்றினார். தனது உரையை முடிக்கும் முன், ”உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு” என்ற திருக்குறளை […]