முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் உலகம் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து குறிப்பிடுகையில், இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயிற்றுவிக்க தமிழகம் முயற்சி எடுத்துள்ளது என குறிப்பிட்டு இருந்தார். காமராஜரும் பிரதமர் மோடியும் ஒன்னா.? திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி இது குறித்து பேசிய பாஜக […]
மத்திய அரசிடம் கேட்டு பெற மாநில அரசுக்கு உரிமை உள்ளது. மத்திய அரசிடம் இணக்கமாக இருந்து மாநிலத்திற்கு தேவையானவற்றை கேட்டு பெற தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். – வி.கே.சசிகலா செய்தியாளர்களிடம் கூறினார். வி.கே.சசிகலா தற்போது செய்தியாளர்களை சந்தித்து, தற்போதைய தமிழக அரசியல் சூழல் பற்றிய தனது கருத்துக்களை பதிவிட்டார். அப்போது அவர்பேசுகையில், ‘ தேர்தல் நேரத்தில் மத்திய அரசை விமர்சிப்பது வேறு. அதன் பின்னர் நடக்கும் அரசாங்கம் வேறு. ‘ என கூறினார். மேலும், ‘ […]
குரங்கம்மை தொடர்பாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல். கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை நோய்க்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், குரங்கம்மை தொடர்பாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குரங்கம்மை பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிக்க வேண்டும். போதிய படுக்கை வசதிகளை சிகிச்சைக்கு […]
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூஷன் அவர்கள், கொரோனா பரவலை கட்டுப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியா முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது சில மாநிலங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து மத்திய சுகாதாரத்துறை […]
பெட்ரோல் மீது ரூ.8, டீசல் மீது ரூ.6 கலால் வரியை வரியை மத்திய அரசு குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது என டாக்.ராமதாஸ் ட்வீட். பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம்.இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய அரசு களால் வரியை குறைத்ததன் மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை […]
பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு மேலும் குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார். மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம்.இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார். மேலும், மத்திய அரசைப் பின்பற்றி, அனைத்து மாநில அரசுகளும் குறிப்பாக கடந்த நவம்பரில் மத்திய […]
இலங்கை தேசிய கீதத்திலிருந்து தமிழை விலக்கியிருப்பது கண்டனத்துக்கு உரியது என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட். இலங்கை தேசிய கீதத்திலிருந்து தமிழை விலக்கியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து ஆசிரியர் கே.வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழலில் மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் பரிதவிக்கும் நிலையில், ஈழத் தமிழர்களுக்கு இலங்கை சிங்கள இனவாத அரசால் ஏற்பட்ட இன அழிவை (Genocide) எல்லாம் மறந்து தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் […]
கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில், பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது. […]