10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் – அமைச்சர் அன்பில் மகேஷ்
10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை வழங்கப்படும் என்றும், இந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும், தீவிரமாக விசாரித்து யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை […]