சென்னை:2-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில், ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் 2-ஆம் வகுப்பு மாணவர் திக்சித்(வயது 7) என்பவர் சிக்கி பலியானார்.மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரிகுலேசன் இயக்குனர் உத்தரவு: விபத்து நடந்த பள்ளியின் நிர்வாகிகளிடம் துணை […]